Header Ads

  • சற்று முன்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 குறைந்தது..

     


    கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக  கடந்த சில வாரங்களாகவே, தங்கம் விலையில் ஏற்ற இறக்கத்தைக் காண முடிகிறது. நேற்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 4,655 க்கு விற்பனையானது. அதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 37,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அதாவது சவரனுக்கு ரூ.192 குறைந்து, 37,048 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 24 குறைந்து 4,631 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    இதேபோல் வெள்ளியின் விலையும்  இன்று கணிசமாக குறைந்து காணப்படுகிறது. சென்னையில்  ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் குறைந்து ரூ.71க்கு விற்பனையாகிறது. இன்றைய விலை நிலவரத்தின்படி வெள்ளி ஒரு கிலோ விலை ரூ. 71 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.  

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad