Header Ads

  • சற்று முன்

    ’’வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதல் ஜோடிகள்’’ -காதலன் தூக்கிட்டு சாவு, காதலி தற்கொலைக்கு முயற்சி திருச்சியில் பரபரப்பு..


    புதுக்கோட்டை மாவட்டம் மாலையீடு சண்முக நகரை சேர்ந்தவர் வினிஸ் வயது ( 28 ) , மதுரை மாவட்டம் பொன்மேனி பைபாஸ் சாலையில் உள்ள ராகவேந்திரா நகரைச் சேர்ந்த நிவேதா இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள காதலன் பினிஸின்  உறவினரான சங்கரின் வீட்டுக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கே இருவரும் இரவு நேர உணவு அருந்தி விட்டு வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறையில் தங்கி உள்ளனர். 

    இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள்  மேல் தளத்திற்குச் சென்று ஜன்னல் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது வினிஸ் போர்வையால் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது உடலில் ரத்தக் காயங்களும் இருந்தன. நிவேதா கைகளில் பிளேடால் கிழித்துக்கொண்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

    உடனே கதவை உடைத்துக்கொண்டு உறவினர் உள்ளே சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த நிவேதாவை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  தகவலறிந்து வந்த மண்ணச்சநல்லூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் காதல் ஜோடிகள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

    இதனால் திருமணத்துக்கு பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்று கருதி இந்த முடிவை எடுத்தார்களா அல்லது காதலர் கிடையே இரவு தகராறு ஏற்பட்டு. காதலி கையை பிளேடால் கீழித்து கொண்டதால் அதிர்ச்சியில் வினிஸ் தற்கொலை செய்தாரா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் நிவேதாவிடம் விசாரித்த பின்னர் தான் உண்மை என்னவென்று தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad