Header Ads

  • சற்று முன்

    10 சவரன் நகைக்காக 5 மாதம் கர்ப்பமான காதல் மனைவியை கொன்ற கணவன்..

    மனவியை கொன்ற கணவன்

    மதுரை மாவட்டத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை கர்ப்பிணி என்றும் பாராமல் மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை மாவட்டம் சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த கணபதி ராஜா.  இவர் மகாலட்சுமி என்ற பெண்ணை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 5 மாத கர்ப்பிணியான நாகலட்சுமி கடந்த திங்கட்கிழமை அன்று மாடியில் துணி  காய வைத்துக் கொண்டிருக்கும் போது தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது அண்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார்.


    இதுகுறித்து போலீசார் கணவன் கணபதி ராஜாவிடம் விசாரனை நடத்தினர். விசாரனையில்  நாகலட்சுமியை திருமணம் செய்து கொள்வதற்கு அவரது சகோதரர்களிடம் 10 சவரன் நகை வரதட்சணையாக கேட்டதாகவும் அவரது சகோதரர்கள் அதை தர மறுத்தும் ராஜலட்சுமியை திருமணம் செய்து கொண்டதாகவும். இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. 

    இதையும் படியுங்கள் ; அசாமில் ஆடு ஈன்ற மனித உருவ முககுட்டி - வைரலாகும் புகைப்படம்.

    இந்நிலையில் வரதட்சணை கிடைக்காத கோபத்தில் நாகலட்சுமியை கர்ப்பிணி என்றும் பாராமல் மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டு கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். 10 சவரன் நகைக்காக காதலித்து திருமணம் செய்துகொண்ட 5 மாத கர்ப்பிணியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad