Header Ads

  • சற்று முன்

    நிர்வாண ஃபோட்டோவ ரிலீஸ் பண்ணிடுவேண் என மிரட்டி 100க்கும் மேற்பட்ட பெண்களை வன்கொடுமை செய்த இளைஞர் கைது..

     


    சமூக வலைதளங்களில் நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டி  100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான்.

    சமீப காலமாக சமூக வலைதளங்களால் அரங்கேறும்  குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகும் முன் பின் தெரியாத நபர்களை நம்பி புகைப்படங்களை அனுப்புவது, வெளியில் செல்வது,  குடும்ப விவரங்களை பகிர்ந்து கொள்வது என பெண்கள் சிக்கிக்கொள்கின்றனர்.  அப்படி  100க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு காமக்கொடூரனுக்கு இரையாகியிருக்கின்றனர். 



    தெலங்கானா மாநிலம் வாரங்கல்லைச் சேர்ந்த 23  வயது இளைஞர் அஜய்.  ஹைதராபாத்தில் தங்கி மல்டிமீடியா படித்து வரும் இவர்,பெண்கள் போல ப்ரொஃபைல் வைத்து  சமூக வலைதளங்களில்  போலிக்கணக்குகளை தொடங்கி அதன்  மூலம் பல பெண்களுக்கு ரெக்வஸ்ட் அனுப்பியிருக்கிறார்.  இவரின் ரெக்வஸ்ட்டுக்கு சம்மதம் தெரிவிக்கும்  பெண்களிடம் மெல்ல பேச தொடங்குவாராம்.

    இவரின் ஆசைப் பேச்சுக்களைக் கேட்டு பல பெண்கள் மயங்கியிருக்கிறார்கள்.  அப்படியே பெண் போலவே பேசி, கொஞ்சம் நாள் பழகிய பிறகு அந்தப் பெண்களின் புகைப்படங்களை கேட்டிருக்கிறார்.  அவர்களும் நம்பி புகைப்படங்களை பகிர்ந்து அனுப்பியிருக்கின்றனர்.  பின்னர் அவர்களிடம் நிர்வாண புகைப்படங்களை கேட்டிருக்கிறார்.  இதனை ஏற்க மறுத்த அந்தப்பெண்கள் அஜையை கடுமையாக திட்டியிருக்கிறார்கள்..  ஆனால் நிர்வாண புகைப்படத்தை அனுப்பவில்லையென்றால்  ஏற்கனவே அனுப்பிய புகைப்படத்தை மார்ஃபிங் செய்து, இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டியிருக்கிறார். 



    இந்த மிரட்டலுக்கு பயந்துபோய் பல பெண்கள் நிர்வாண புகைப்படங்களை அனுப்பியிருக்கிறார்கள். அவ்வாறு நிர்வாண புகைப்படம் அனுப்பும் பெண்களை , தன் ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அந்தப் புகைப்படத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டியிருக்கிறார். இப்படி மிரட்டியே 100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட் ஒரு பெண் அளித்த புகாரில், விசாரணை நடத்திவந்த சைபர் கிரைம் போலீஸார் தலைமறைவாகி இருந்த அஜய்யை கைது செய்தனர்.






    No comments

    Post Top Ad

    Post Bottom Ad