Header Ads

  • சற்று முன்

    12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திச் சென்ற டியூசன் மாஸ்டர்.. போஸ்டர் அடித்து தேடும் போலீசார்.!!

     

    12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திச் சென்ற டியூசன் மாஸ்டர்

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கங்கவெளி பகுதியை சேர்ந்தவர் மணிமாறன் வயது 40 இவர் சரவணம்பட்டியில் உள்ள டியூஷன் சென்டர் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த 12 வகுப்பு பள்ளி மாணவி அவரிடம் டியூஷன் படித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி மணிமாறன் மாணவியை மயக்கி கடத்திச் சென்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் விசாரணையில் மணிமாறன் சேலம் ஆரம்ப பள்ளி ஆசிரியராக இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்றும். முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணத்தை செய்து கொண்டு மனைவி மற்றும் குழந்தையுடன் 2018 ஆம் ஆண்டு சேலத்தில் வசித்து வந்தார் என்றும்.


    12 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்திச் சென்ற டியூசன் மாஸ்டர்


    2019 ஆம் ஆண்டு நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானார் என்றும். சிறுமியை கடத்திச் சென்று பழனி, கொடைக்கானல், திண்டுக்கல், மதுரை, திருச்சி, பொள்ளாச்சி, என பல்வேறு இடங்களில் சிறுமியை அழைத்து சுற்றித்திரிந்து உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

    அவரை பிடிப்பதற்காக அவருடைய புகைப்படத்தை போஸ்டர் அடித்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒட்டி மணிமாறனை தேடி வருகிறோம் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் இவரை எங்கு பார்த்தாலும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad