Header Ads

  • சற்று முன்

    தமிழகம் முழுவதும் நாளை 14-வது மெகா தடுப்பூசி முகாம்.!!

     

    தமிழகம் முழுவதும் நாளை 14-வது  மெகா தடுப்பூசி முகாம்.!!

    தமிழகத்தில் கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கு தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. நேற்றுவரை 7 கோடியே 24 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இன்னும் 1 கோடி பேர் முதல் தவணைத் தடுப்பூசியும். 80 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர்.


    தமிழகம் முழுவதும் நாளை 14-வது  மெகா தடுப்பூசி முகாம்.!!


    இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் 14-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்த இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.


    தமிழகம் முழுவதும் நாளை 14-வது  மெகா தடுப்பூசி முகாம்.!!


    சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் 1600 இடங்களிலும் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போடாமல் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும். கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad