Header Ads

  • சற்று முன்

    ரோட்டில் நடந்து சென்ற பெண் செல்போன் தர மறுத்ததால் 150 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்.!!

    செல்போன் தர மறுத்த பெண் மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்ற கொள்ளையர்கள்

    டெல்லியில் வியாழனன்று ஷாலிமார்பாக் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் அன்று மாலை வேலையை முடித்துவிட்டு சாலையில் தனிமையில் நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணிடம் உள்ள செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். இதனை சுதாரித்துக் கொண்ட அந்த பெண் செல்போனை இறுக்கமாக பிடித்துள்ளார்.

    செல்போன் கிடைக்காத ஆத்திரத்தில் சிறிது தூரம் சென்று திரும்பி வந்த கொள்ளையர்கள் அந்தப் பெண்ணிடம் இருந்து செல்போனை மீண்டும் பறிக்க முயற்சித்துள்ளனர். செல்போனை தர மறுத்து கொள்ளையர்களின் சட்டையை பிடித்து உள்ளார் அந்தப் பெண். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் தர தர தரவென 150 அடி தூரம் வரை சாலையில் இழுத்துச் சென்றுள்ளனர்.

    இதைப் பார்த்த பொதுமக்கள் அவரை பிடிக்க முயன்ற போது அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர் காயமடைந்த பெண்ணை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை பறிக்க முயன்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad