Header Ads

  • சற்று முன்

    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் டிசம்பர் 16-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

     

    தமிழகம், புதுச்சேரி,காரைக்காலில், டிசம்பர் 16- வரை  மழைக்கு வாய்ப்பு

    வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக வரும் 16-ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை வரை மிதமான மழை பெய்யும் எனவும் உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தென்மாவட்டங்களில் மிதமான மழையும் வடமாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad