Header Ads

  • சற்று முன்

    அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் மீண்டும் ஒத்திவைப்பு - டிச-17 தேதி நடைபெறும் என அறிவிப்பு.

     

    அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

    தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் திமுக அரசு தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்றுவதிலோ அல்லது மக்களின் அன்றாட தேவைகளை குறித்தும். அவர்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகளை குறித்தும். தீர்வு காண்பதில் திமுக அரசு சிறிதும் அக்கறை கொள்ளாமல் வாய் சவடால் ஆட்சி நடத்திக் கொண்டிருப்பதை அதிமுக கண்டிக்கிறது.


    அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்


    அரசின் இந்த அலட்சிய போக்கினை எதிர்த்து போராட முழு ஆற்றலையும் பயன்படுத்துவோம் என்றும் பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசு வரியை குறைக்கவும், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அளிக்கவும், பொங்கல் பண்டிகையை கொண்டாட உதவும் வகையில் பரிசுத்தொகை அளிக்கவும், அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடுவதை கண்டித்தும்

    அரசின் அலட்சியத்தால் கடுமையாக உயர்ந்திருக்கும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வை எதிர்த்து, தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் டிசம்பர் 9 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில் 11 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.


    அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் அறிக்கை


    தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்கள் பிரச்சனைகளை கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து கழகத்தின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வருகின்ற 11.12.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களுடைய மறைவையொட்டி வருகின்ற 17.12 2021 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad