Header Ads

  • சற்று முன்

    சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ முருங்கைகாய் ரூ.180க்கு விற்பனை...


     

    சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறிகளில் வரத்து குறைவால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக காய்கறிகளில் வரத்து வெகுவாக குறைந்தது. இதனால் கடும் தட்டுப்பாடு நிலவும் அபாயம் இருப்பதாகக் கூட வியாபாரிகள் எச்சரித்தனர். 

    இந்நிலையில் இன்று  கத்தரிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய், முள்ளங்கி, குடை  மிளகாய், வெண்டைக்காய், கேரட்பீன்ஸ் என அனைத்து காய்கறிளின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கிறது.  அதிகபட்சமாக ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.150 முதல் ரூ.180 வரையிலும், ஒரு கிலோ தக்காளி ரூ.80 முதல் ரூ 90 வரை விற்பனை செய்யப்படுகிறது.

     உஜாலா கத்தரிக்காய் கிலோ ரூ.80 க்கும், வெண்டைக்காய் ரூ.70க்கும், அவரைக்காய் ரூ.80 க்கும் , கருவேப்பிலை ஒரு கட்டு ரூ 50 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வரிசையில் கேரட் கிலோ 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும், பீன்ஸ் கிலோ ரூ.70 க்கும், பீர்க்கங்காய் கிலோ ரூ. 60 க்கும், வெங்காயம் கிலோ ரூ.36 க்கும் விற்பனையாகிறது.

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad