Header Ads

  • சற்று முன்

    செங்கல்பட்டில் முகவரி கேட்பது போல் நடித்து 2 லட்சத்தை அடித்துச் சென்ற 2 பலே கில்லாடிகள்.

    செங்கல்பட்டில் 2 லட்சம் பணம் கொல்லை

    செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் வங்கியில் இருந்து எடுத்துவரப்பட்ட 2 லட்ச ரூபாய் பணத்தை அட்ரஸ் கேட்பது போல் கவனத்தைத் திசைதிருப்பி தட்டிச் சென்ற மர்ம நபர்களின் சிசிடிவி வீடியோ  வெளியாகியுள்ளது.

    மறைமலர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவர் திருவள்ளுவர் சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் இருந்து  2 லட்சம் ரூபாய் எடுத்து வந்து தனது இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் உள்ள டேங்க் கவரில் வைத்துள்ளார். 

    இதையும் படியுங்கள் ; 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்.

    அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் அட்ரஸ் கேட்பது போல் நடித்து அவரது கவனத்தை திசை திருப்ப மற்றொருவர் டேங்க் கவரில் உள்ள பணத்தை எடுத்த நிலையில் அங்கிருந்து இருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றுள்ளனர். முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில் மறைமலைநகர் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad