Header Ads

  • சற்று முன்

    மும்பை நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.!!!

    மும்பை நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.


    இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் தொடரில் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது இரண்டாவது டெஸ்ட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 375 ரன்களும், நியூசிலாந்து அணி 62 ரன்கள் எடுத்திருந்தனர். முதல் இன்னிங்சில் 263 ரன்கள் முன்னிலையில் இந்தியா இருந்தது. தன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் 7 விக்கெட்டுக்கு 276 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

    மும்பை நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.


    540 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மூன்றாவது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. 400 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் இன்று 4வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் அஸ்வின், ஜெயந்த் யாதவ், இருவரது பந்து வீச்சில் நியூசிலாந்து அணி வீரர்கள் ஆல் அவுட் ஆனார்கள் நியூசிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

    மும்பை நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.


    இன்றைய ஆட்டத்தில் அஷ்வின் ஜெயந்த் யாதவ் தலா 4 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 372 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 14 தொடர்களில் விளையாடிய இந்தியா 14 தொடர் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad