Header Ads

  • சற்று முன்

    சண்டிகரிலிருந்து 2500 கிலோ மீட்டர் பயணம் செய்து’.. சென்னை நபரின் உயிரை காப்பாற்றிய இதயம்

     

    சண்டிகரில் இருந்து 2500 கிலோ மீட்டர் பயணம் செய்து’.. சென்னை நபரின் உயிரை காப்பாற்றிய இதயம்

    சண்டிகர்; உடல் உறுப்பு தானத்தில் மற்றொரு புதிய சாதனை. சண்டிகரில் இருந்து சுமார் 2500 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து வந்த இதயம் சென்னையில் இதய நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ளது.

    சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நபரின் இதயம் தானமாக பெறப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட இதயத்தை சுமார் 22 நிமிடத்தில் மொஹாலி விமான நிலையத்துக்கு வந்தடைந்தது.

    விமானம் அங்கிருந்து புதன்கிழமை மாலை 3:35 மணிக்கு புறப்பட்டு இதயம் சென்னை விமான நிலையத்துக்கு இரவு 8:30 மணிக்கு வந்து சேர்ந்தது. உடனடியாக அங்கிருந்து எம்ஜிஆர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு இதய பாதிப்பு சிகிச்சை பெற்றுவந்த 52 வயது நபருக்கு பொருத்தப்பட்டது.


    சண்டிகரில் இருந்து 2500 கிலோ மீட்டர் பயணம் செய்து’.. சென்னை நபரின் உயிரை காப்பாற்றிய இதயம்


    கல்லீரல் சிறுநீரகம் உள்ளிட்ட மற்ற உறுப்புகள் அனைத்தையும் சண்டிகரில் உள்ள அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை இயக்குனர் சுர்ஜித் சிங் கூறுகையில். உடல் நலம் பாதிக்கப்பட்ட  உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்த அவரது குடும்பத்தாருக்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் சென்னையில் இதயம் பெற்றவர் உட்பட ஆறு பேருக்கு உயிர் காக்க பட்டுள்ளது என்று கூறினார்

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad