Header Ads

  • சற்று முன்

    முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை தேடும் பணி தீவிரம்’’. மேலும் 2 தனிப்படை அமைப்பு.

    கே.டி. ராஜேந்திர பாலாஜி

    தலைமறைவாகியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய மேலும்  2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.  

    அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அவர் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ. 3 கோடி வரையில் பணம் பெற்றுக்கொண்டு  மோசடி செய்துள்ளார்.

     இந்த வழக்கில் கைதாவதைத் தவிர்க்க ராஜேந்திர பாலாஜி முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து  அவர் தலைமறைவானதாக செய்திகள் வெளியாகின

    கே.டி. ராஜேந்திர பாலாஜி

    முன் ஜாமீன் தள்ளுபடியானதால் இராஜேந்திர பாலாஜியைவிருதுநகர்  மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் 6 தனிப்படைகள்  அமைத்து  தேடிவந்தனர். இந்நிலையில் மேலும் 2 தனிபடைகள் அமைத்து தீவிரமாக தேடிவருகின்றனர்.

    ஏற்கனவே அமைக்கப்பட்ட 6 தனிப்படை போலீசார் பெங்களூர், மதுரை, நத்தம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளை கண்காணித்து வருவதாகவும். மேலும் கூடுதலாக அமைக்கப்பட்ட 2 தணிப்படைகள் கேரளா மாநிலம், தென்காசி மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளை கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    கே.டி. ராஜேந்திர பாலாஜி

    இதையும் படிக்கவும்; யூ டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்”..இறந்து பிறந்த குழந்தை’’.. கணவர் கைது.

    கே.டி.ராஜேந்திர  பாலாஜி இருப்பிடத்தை கண்டறிய அவரது நெருங்கிய  நண்பர்கள்  மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்த அவசியப்பட்டால் அவர்களுக்கு சம்மன் அனுப்பிதான் விசாரிக்க வேண்டும் என  மதுரை ஐகோர்ட் ஏற்கனவே போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில் அவர்களை கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராஜேந்திர பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் செல்போன் எண்களை கண்காணிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad