Header Ads

  • சற்று முன்

    ’’2 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள்’’..காண்போரை கண்கலங்க செய்த தாயின் கண்ணீர் வீடியோ..

    ’’2 வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள்


    கடலூர் மாவட்டம் திருநெல்வேலியில் 2 வயது குழந்தையை நான்கு தெரு நாய்கள் சேர்ந்து கடித்து குதறிய நிலையில் தன் மகனுக்கு நேர்ந்த சோகம் போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என தாய் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் சபரிநாதன் - தமிழரசி என்ற தம்பதியினருக்கு 2 வயதில் மகன் உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாத்தாவுடன் மெயின் பஜாரில் உள்ள கோல்டன் ஜூப்ளி பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த நான்கு தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து சிறுவனை சரமாரியாக கடித்து குதறியதாக கூறப்படுகிறது. குழந்தைக்கு தற்போது புதுச்சேரியில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    தாயின் கண்ணீர் மல்க புகைப்படம்

    இதையும் படியுங்கள் ; ’’கதறி அழுத யாஷிகா ஆனந்த்’’..ஆறுதல் கூறும் ரசிகர்கள்..

    இந்நிலையில் அந்த குழந்தையின் தாய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது தெரு நாய்களால் எனது மகனுக்கு நேர்ந்தது போன்று வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்றும்.  இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். குழந்தைகளை பொது இடங்களில் தனியாக விட்டுச் செல்லக் கூடாது எனவும் தாய் கண்ணீர் மல்க கூறியது காண்போரை கலங்க செய்துள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad