Header Ads

  • சற்று முன்

    2வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை... பெற்றோரின் கவனக்குறைவால் உயிரிழந்த சோகம்...

     


     

    பல்லாவரம் அருகே இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த மூன்று வயது குழந்தை  சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை பல்லாவரம்  அடுத்த பொழிச்சலுார், ராஜேஸ்வரி நகர், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் முருகன். அவரது, மூன்று வயது குழந்தை சர்வன். நேற்று ,முன் தினம் வீட்டின் கீழ் தளத்தில் வர்ணம் பூசும் வேலை நடந்தது. அதனால், குழந்தையை ‛டிவி’ பார்க்க வைத்துவிட்டு, பெற்றோர் இருவரும், வர்ணம் பூசும் வேலை கவனித்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் இரண்டாவது , மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த குழந்தை சர்வன் நிலைதடுமாறி படிக்கெட்டின் கைபிடி வழியாக தவறி கீழே விழுந்தான்.

    இதையும் படிக்க... இந்தியாவில் 6.04 கோடி பிரியாணி ஆர்டர்கள் - ஸ்விக்கி கொடுத்த ஷாக்கிங் ரிப்போர்ட்...  

    இதில்  தலையில் படுகாயமடைந்த குழந்தை சர்வனை பெற்றோர்  மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.  அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கபட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக, சின்னமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி, நேற்று  மாலை உயிரிழந்தான் 

    தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad