Header Ads

  • சற்று முன்

    மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3000 கோடி கடன் உதவி : தொடங்கி வைத்தார் முதல்வர்...

     

    கண்காட்சியை பார்வையிட்ட முதல்வர்..

    மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3000 கோடி கடனுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

    இந்தியாவிலேயே  முதன் முறையாக கலைஞர் ஆட்சியில் 1989 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் சுய உதவிக்குழு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை தமிழ்நாட்டில் 7.25 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு அந்த குழுவில் சுமார் ஒரு கோடியே 6 லட்சம் பேர் மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு அரசின் சார்பில் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.


     

    இந்நிலையில் மகளிர் சுய உதவி குழுக்களின் மேம்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆண்டு 20,000 கோடி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் பல்வேறு மாவட்டத்தில் இதுவரை 10,000  கோடி அளவுக்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இறந்து கிடந்த தாய், தந்தை : தெறித்து ஓடிய மகன், மகள் - காவல்துறை தீவிர விசாரணை..  

    இந்நிலையில் இன்று (14.12.2021  )முதலமைச்சர் மு,க.ஸ்டாலின் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3000 கோடி கடனுதவி வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி  பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் இதனை வழங்கினார்.


     

    தொடர்ந்து தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி மற்றும் தயாரிப்பு பொருள்களின் கண்காட்சியை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.கே.ஆர் பெரியகருப்பன், பால்வளத் துறை அமைச்சர் திரு.சாமு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் திரு.சந்திரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ.அமுதா,  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad