Header Ads

  • சற்று முன்

    ஈரோடு மாவட்டத்தில் கொய்யாக்காய் என நினைத்து விஷ காய்களை அருந்திய 4 சிறுவர் மருத்துவமணையில் அனுமதி..

    விஷ காய்களை அருந்திய 4 சிறுவர்கள்

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொய்யாக்காய் என நினைத்து விஷ காய்களை அருந்திய நான்கு சிறுவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாசரிபாளைய கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், பூவரசன், உதயகுமார், மற்றும் நிவேஷ் ஆகிய 4 சிறுவர்கள் சாலையோரம் வேலையில் இருந்த காட்டாமணக்கு செடியில் இருந்த காய்களை கொய்யாக்காய் என நினைத்து பறித்து சாப்பிட்டுள்ளனர். 

    இதையும் படியுங்கள் ; ’’குழந்தை இல்லாததற்காக புள்ளப்பூசியை சாபிடவைத்த மாமியார், நாத்தனார் கொடுமை’’ - மாப்பிள்ளை குடும்பத்தினருக்கு சிறை..

    அவை விஷ காய்கள் என்பதால் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சிறுவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதை கண்ட  அவர்களது பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் அவர்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அனுமதிக்கப்பட்ட நான்கு சிறுவர்களும் தற்போது நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad