Header Ads

  • சற்று முன்

    ஓமைக்ரானால் தென் ஆப்பிரிக்காவில் 4வது அலை வந்துவிட்டது.

     


    கடந்த மாதம் 24 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோன வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்டா வைரஸை விட 5 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.

     இந்நிலையில், ஓமைக்ரான் வைரஸால்  தென் ஆப்பிரிக்கா 4வது அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பஹ்லா தெரிவித்திருக்கிறார். 

    மேலும்தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒன்பது மாகாணங்களில்,  7  மாகாணங்களில் ஓமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். அதோடு அதிக உயிரிழப்புகள் ஏற்படாமல்  கட்டுப்படுத்த முடியும் என நம்புவதாக கூறிய ஜோதென் ஆப்பிரிக்காவில் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு  வலியுறுத்தினார். 

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள்  விதிக்காமலேயே  நான்காவது அலையை சமாளிக்க முடியும் என்றும், இதற்காக முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை  என்றும் ஜோ பாஹ்லா கூறினார். 

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad