Header Ads

  • சற்று முன்

    நள்ளிரவு தீரன் பட பாணியில் பயங்கர கொள்ளை”..படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.

    நள்ளிரவு தீரன் பட பாணியில் பயங்கர கொள்ளை

    அரக்கோணம் அருகே நள்ளிரவு 12 மணி அளவில் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகில் இருக்கும் செய்யூர் கண்ணிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பகரன்.  இவர் தனது குடும்பத்தாருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் மர்ம நபர்கள் அவர் வீட்டின் கதவை வேகமாகத் தட்டி உள்ளனர். 

    இதனால் பயந்து போய் புஷ்பகரன் என்னவோ ஏதோ என்று கதவை திறந்துள்ளார். வெளியில் மர்மநபர்கள் வீச்சரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன்  நின்று கொண்டிருந்தார்கள்.  இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதவை மூடி விட்டார் ஆனால் மர்ம நபர்கள் கதவை உடைத்து விட்டு உள்ளே புகுந்து வீட்டிலிருந்த புஷ்பகரன் உட்பட 4 பேரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர் மற்றும் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

    நள்ளிரவு தீரன் பட பாணியில் பயங்கர கொள்ளை

    இதில் நான்கு பேரும் பலத்த காயமடைந்துள்ளனர் பின்பு பெண்கள் அணிந்திருந்த நகை உட்பட 25 சவரன் நகையும் 40 ரூபாய் ரொக்கப் பணத்தையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர். காயமடைந்தவர்கள் அரக்கோணம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் வீடு புகுந்து கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நள்ளிரவு தீரன் பட பாணியில் பயங்கர கொள்ளை

    இந்நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தை போலீசார் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடிவருகின்றனர். 

    இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில் கொள்ளையர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி, ஆகிய மொழிகளில் பேசியதாகவும்.  தங்களை ஆங்கிலத்தில் பேச வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளனர்.  இந்தக் கொள்ளையில் வடமாநில கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad