Header Ads

  • சற்று முன்

    தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஸ்மார்ட் ஃபோன் பரிசு...

    courtasy image

     

    கொரொனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள , வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதோடு  தடுப்பூசி செலுத்திக்கொள்வதும் அவசியமாகிறது. இதனால்  மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்தும் பணியை முடுக்கிவிட்டுள்ளன. ஆனாலும் பொதுமக்கள் சிலர் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வருகின்றனர். 

    இதனால் கட்டுப்பாடுகள் விதிப்பது, பொது இடங்களுக்குச் செல்ல தடை விதிப்பது, தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு பரிசுகள் வழங்குவது என பல முயற்சிகளை அரசு  மேற்கொண்டு வருகிறது. அந்தவரிசையில், கொரோனா 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு ஸ்மார்ட் ஃபோன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், டிசம்பர் 4 தேதி முதல் 10 தேதிக்குள், கொரோனா இரண்டாம் தவனை  தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 50,000 ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் ஃபோன் வழங்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.  பயனாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் நகராட்சி  ஆணையர் அமித் அரோரா அறிவித்திருக்கிறார்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad