Header Ads

  • சற்று முன்

    ’’பிறந்து 5 நாட்களே ஆன பெண் சிசுவை சுவற்றில் அடித்து கொலை’’- தலைமறைவான பெற்றோர் கைது

    பிறந்து 5 நாட்களே ஆன பெண் சிசு கொலை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியகட்டளை பகுதியில் பிறந்து ஐந்து நாட்களே ஆன பெண் சிசுவை கொன்று புதைக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவான பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

    பெரிய கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி இவரது மனைவி கௌசல்யா இந்த தம்பதியருக்கு கடந்த 23 தேதி அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக பிறந்த  பெண் குழந்தையை உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக கூறி வீட்டின் அருகே புதைத்துள்ளனர்.

    பிறந்து 5 நாட்களே ஆன பெண் சிசு கொலை

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கவே காவல்துறையினர் 29 தேதி அன்று புதைத்த பெண் சிசுவின் உடலை தோண்டி எடுத்து பிரேத  பரிசோதனை செய்தனர். இதில் பெண் சிசுவை அடித்து கொலை செய்யப்பட்டது தெறியவந்தது. இதனால் தலைமறைவான  முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யாவை  தேடி வந்தனர்.

    இதையும் படியுங்கள் ; ஈரோடு மாவட்டத்தில் கொய்யாக்காய் என நினைத்து விஷ காய்களை அருந்திய 4 சிறுவர் மருத்துவமணையில் அனுமதி..

    இந்நிலையில் போலீசார் போரையூரில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கிருந்த முத்துப்பாண்டி மற்றும் கௌசல்யாவை கைது செய்தனர்.விசாரனையில் ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூறாவதும் பெண் குழந்தை என்பதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு கோபத்தில் குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. அதனை மறைபதற்காக குழந்தை உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டதாக கூறி புதைத்ததும் தெரியவந்ததுள்ளது

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad