Header Ads

  • சற்று முன்

    தமிழகத்தில் உள்ள 610 மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் திட்டத்தை வரும் 18 தேதி முதல்வர் தொடங்கி வைகிறார்.

     



    இன்னுயிர்  காக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

    சாலை விபத்துகளில் காயமடைபவர்களை  காப்பாற்ற தமிழகம் முழுவதும் உள்ள  610- மருத்துவமனைகளில்  இன்னுயிர் காப்போம் திட்டத்தை வரும் டிசம்பர் 18 ஆம் தேதிமுதலமைச்சர் மு..ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

     சாலை விபத்துக்களில் சிக்கி காயமடைபவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூபாய் 5,000 பரிசு வழங்கப்படும் என ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.  இதேபோல் விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு  48 மணிநேரம் இலவச சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும் சமீபத்தில் முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.


    இன்னுயிர்  காக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்


    அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி மருத்துவமனையில்இன்னுயிர் காப்போம்திட்டத்தை டிசம்பர் 18-ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். அதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்


    இன்னுயிர்  காக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்


    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்இந்த திட்டம் 610 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும்இந்த திட்டம்  சாலை விபத்துக்களால் பாதிக்கப்படுவோருக்கு  உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த திட்டம் மூலம் விபத்துக்குள்ளானவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தமிழக அரசு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் எனவும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

     


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad