Header Ads

  • சற்று முன்

    அமெரிக்காவை தாக்கிய கொடூர சூறாவளி 80-க்கும் மேற்பட்டோர் பலி.!!

     

    அமெரிக்காவை தாக்கிய கொடூர சூறாவளி 80-க்கும் மேற்பட்டோர் பலி.!!

    அமெரிக்காவில் கொடூரமான சூறாவளி தாக்கியதில் 80 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சூறாவளி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவில் இருந்து கொடூரமான சூறாவளி தாக்கி வருகிறது. சூறாவளி தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக உள்ள நிலையில் மேலும் 100 தாண்டும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    இந்த சூறாவளி 5 மாகாணங்களை குறிப்பாக தாக்கியுள்ளது. ஆர்கன்சாஸ், இல்லினாய்ஸ், மிசோரி, டென்னிஸி மாகாணங்களிலும் கொடூரமான சூறாவளி தாக்கியதில் மக்கள் பலியாகியுள்ளனர். இந்த சூறாவளி 400 கிலோ மீட்டர் வரை பயணம் செய்துள்ளது. கடைசியாக 1925-இல் அமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் 355 கிலோமீட்டர் தூரம் சென்றது. அதன் பின்னர் இப்போதுதான் சூறாவளி ஒன்று இவ்ளோ தூரம் பயணித்து உள்ளது இதனால் அமெரிக்காவை தாக்கிய நீளமான சூறாவளிகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.


    அமெரிக்காவை தாக்கிய கொடூர சூறாவளி 80-க்கும் மேற்பட்டோர் பலி.!!


    அமெரிக்காவில் உள்ள 5 மாகாணங்களில் இருக்கும் பத்துக்கும் மேற்பட்ட கவுண்டர்களில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சூறாவளி தாக்கிய இடங்களில் மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த கொடூரமான சூறாவளி தாக்கியதில் 5 மாகாணங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.


    அமெரிக்காவை தாக்கிய கொடூர சூறாவளி 80-க்கும் மேற்பட்டோர் பலி.!!


    கொண்டகியில் உள்ள மெழுகு உற்பத்தி மையம் பலத்த சேதம் ஏற்பட்டு அதில் பணிபுரிந்த பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பலியாகினர். அதேபோன்று இல்லினாய்ஸ் மாகானத்தில் அமேசான் மூலம் ஆடர் செய்த பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டிருந்த 6 பேர் பலியானார்கள். இதுகுறித்து அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் வரலாற்றில் மிகப் பெரிய சூறாவளியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad