Header Ads

  • சற்று முன்

    ஒரே நேரத்தில் இரண்டு கைகள் கால்களால் மஞ்சப்பை விழிப்புனர்வு ஓவியம் வரைந்த ஆசிரியர்.

    மஞ்சப்பை திட்டம்-விழிப்புனர்வு ஓவியம்

    தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை வரவேற்கும் விதமாக கை மற்றும் கால்களால் ஒரே நேரத்தில் நான்கு ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார் பகுதிநேர ஆசிரியர் செல்வம்.

    மஞ்சப்பை திட்டம்-விழிப்புனர்வு ஓவியம்

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையை சேர்ந்தவர் செல்வம். இவர் பகுதிநேர ஓவிய ஆசிரியராக அப்பகுதியில் உள்ள சிவனார்தாங்கல்  கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட மீண்டும் மஞ்சப்பை என்ற திட்டத்தை வரவேற்கும் விதத்திலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும் தன்னுடைய இரண்டு கை மற்றும் கால்களால் நான்கு ஓவியங்களை 40 நிமிடங்களில் வரைந்து அசத்தியுள்ளார். 

    மஞ்சப்பை திட்டம்-விழிப்புனர்வு ஓவியம்

    இதையும் படியுங்கள் ; முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்களா??- பேலீசாருக்கு ரகசிய தவல்.

    கைகளால் முதல்வர் ஸ்டாலின் படமும் மற்றும் மஞ்சப்பை படம் வரைந்து. ஒரு காலால் மரம் வளர்ப்போம் படமும் மற்றொரு காலால் பிளாஸ்டிக் பை தவிர்த்தல் படம் என ஒரே நேரத்தில் நான்கு ஓவியங்களை வரைந்துள்ளார்.  ஓவிய ஆசிரியர் செல்வத்தை பொதுமக்களும் ஆசிரியர்களும் பாராட்டி வருகின்றனர்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad