Header Ads

  • சற்று முன்

    பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மரணம்..’’ அவரது பெயரை போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்தார்.’’- ஸ்டாலின் புகழஞ்சலி.!

    பிரபல பாடகர் மாணிக்க விநாயகம் மரணம். ஸ்டாலின் அஞ்சலி

    சினிமா துறையில் பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் இதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாரடைப்பால்  காலமானார்.

    பிரபல பாடகர் மாணிக்க விநாயகம் குடும்பத்துடன் அடையாறு சாஸ்திரி நகரில் வசித்து வருகிறார்.  இவரது தந்தை பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவூர் ராமையா அவர்.  பிரபல மாணிக்க விநாயகம் இதயக் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்து  தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

    பிரபல பாடகர் மாணிக்க விநாயகம் மரணம். ஸ்டாலின் அஞ்சலி

    இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு தில் என்ற படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான பக்தி பாடல்களையும், நாட்டுப்புற பாடல்களையும் பாடியுள்ளார். இவரது மறைவுக்கு நடிகர் நடிகைகள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    பிரபல பாடகர் மாணிக்க விநாயகம் மரணம். ஸ்டாலின் அஞ்சலி

    இதையும் படிக்க ; கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று பேரலில் அமுக்கிவைத்த பாசக்கார மனைவி.

    இவரது இறுதிச் சடங்கு ஆனது இன்று நடைபெற உள்ள நிலையில் மாணிக்கவிநாயகம் வீட்டிற்கு சென்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய முதல்வர் அவரது பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒழித்தார் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad