Header Ads

  • சற்று முன்

    ராமநாதபுரத்தில் மின்சாரம் தக்கி விவசாயி பலி..ஊர் பொது மக்கள் சாலை மறியல்..

    current shock


    ராமநாதபுரம் மாவட்டத்தில் உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து விவசாயி ஒருவர் உயிரியந்துள்ளார். இதனால் கிராம மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துர் அருகே மேலச்சிறுபோது என்ற கிராமத்தில் உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் முத்தையா வயது ( 65 ) என்ற விவசாயி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மேலச்சிறுபோது என்ற கிராமத்தில் 500 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை முத்தையா வயல் வேலைக்கு சென்ற போது உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததை கவனிக்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே முத்தையா துடி துடித்து இறந்துள்ளார்.

    இதையும் படிக்க ; நிர்வாண ஃபோட்டோவ ரிலீஸ் பண்ணிடுவேண் என மிரட்டி 100க்கும் மேற்பட்ட பெண்களை வன்கொடுமை செய்த இளைஞர் கைது..

    கடந்த சில நாட்டளுக்கு முன்பாக உயரழுத்த மின் கம்பி விவசாயிகள் நின்று தொடும் அளவுக்கு இருந்ததாகவும். இதனை பல முறை புகார் அளித்தும்  மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக கூறி உயிரிழந்த முத்தையாவின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  இதுகுறித்து  சம்பவ இடத்தில் போலீசார் மற்றும் வாருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad