Header Ads

  • சற்று முன்

    கோவையில் லாரி மோதி அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து - 7 பேர் காயம்.

    கோவையில் அரசு பேருந்து விபத்து.

    கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள  வளைவில் நிலக்கரி லோடு ஏற்றிக்கொண்டு வந்த லாரி அரசு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு அரசு பேருந்து ஒன்று சுமார் 15 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.  பேருந்து ஆலங்கொம்பு பகுதிக்கு  வந்தபோது.

    இதையும் படிக்க ; திருவொற்றியூரில் கட்டிட விபத்து -கட்டிடத்தின் தன்மையை ஆய்வு செய்வது அரசின் பொறுப்பு...டிவிட் செய்த டிடிவி. தினகரன்.

    அதற்கு எதிராக தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு  வேகமாக வந்த லாரி வளைவில் திரும்ப முயன்று, அரசு பேருந்தின்  பக்கவாட்டின் மீது மோதியது. இதில் அரசு பேருந்து சாலையோரம் இருந்த கடையின் மீது கவிழ்ந்து விழுந்தது  இதில் 7 பேர் காயமடைந்தனர்.  உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad