Header Ads

  • சற்று முன்

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்களா??- பேலீசாருக்கு ரகசிய தவல்.

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    ஆவின் உள்ளிட்ட  பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 3 கோடி பணம் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. இந்த புகார் குறித்து விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவின் பேரில் போலீசார்  விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் கே டி ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார் அந்த மனுவை தள்ளுபடி செய்ததை அடுத்து அவர் தலைமறைவானார் அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    இதுவரை கே டி ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி அவரது மனைவி மாலதி வேல்முருகன் உள்பட பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், கடலூர் என தமிழகம் முழுவதும் பலரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

    முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    தற்போது  மேலும் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது  73 லட்சம் மோசடி புகார் வந்து இருப்பதாக மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.  இந்த புகாரின் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து முதல் கட்டமாக புகார் கொடுத்தவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது எந்தப் பணிக்காக யார் மூலம் பணம் கொடுக்கப்பட்டது என  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் கே.டி. ராஜேந்திரபாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர் முக்கிய அரசியல் கட்சி பிரமுகரின் உதவியால் அவர் அங்கு இருப்பதாக தெரிகிறது. அது மட்டுமின்றி ராஜேந்திரபாலாஜி தரப்பில் புகார் கொடுத்தவர்களை சந்தித்து சமரச முயற்சி எடுப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளன. இதுகுறித்தும்  போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

    இதையும் படியுங்கள் ; ’’வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த காதல் ஜோடிகள்’’ -காதலன் தூக்கிட்டு சாவு, காதலி தற்கொலைக்கு முயற்சி திருச்சியில் பரபரப்பு..


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad