Header Ads

  • சற்று முன்

    பள்ளிக்கரணை சதுப்புநிலம் சீரமைப்பு: ஒப்புதல் வேண்டி தமிழச்சி தங்கபாண்டியன் கடிதம்

    தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி

    பள்ளிக்கரணை சதுப்புநிலம் சீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வேண்டும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார்.

    நேற்று (22.12.2021), புதுடெல்லியில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவை, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் திரு.சு.வெங்கடேசன் எம்.பி.ஆகியோர் சந்தித்து, பள்ளிக்கரணை சதுப்புநில சீரமைப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என மனு அளித்தார். 

    கடிதத்தில் கூறியிருப்பதாவது பள்ளிக்கரணை சதுப்பு நிலம். நாட்டின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றான ஈரநிலமாகும். சதுப்பு நிலம் என்பது முக்கியமானது. ஏனென்றால் இது அதிகப்படியான வெள்ளநீரை சேகரிக்கிறது, மேலும் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துகிறது, காலநிலை மாற்றத்தை கையாள்வதற்கும் உதவுகிறது என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி

    அது மட்டுமின்றி சதுப்பு நில சீரழிவு காரணமாக சமூகத்துக்கு 38.11 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சுற்றுச்சூழல் நன்மைகள் இழக்கப்படுவதாகவும்.
    பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மேலும் சீரழிவதை தடுப்பது, ஈரநில நீரியல், சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நிலையான பயன்பாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு சதுப்புநில சீரமைப்பு தொடர்பாக தமிழக அரசு சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.

    இது நபார்டு வங்கி மூலம் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இந்த விரிவான திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த திட்டம் அருகில் உள்ள குடியிருப்பாளர்களுக்கும், சுற்றுச்சூழல் அமைப்புக்கும் உகந்தது என்பதை கருத்தில் கொண்டு அதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கூறியுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad