Header Ads

  • சற்று முன்

    ’’குழந்தை இல்லாததற்காக புள்ளப்பூசியை சாபிடவைத்த மாமியார், நாத்தனார் கொடுமை’’ - மாப்பிள்ளை குடும்பத்தினருக்கு சிறை..

    தற்கொலைக்கு தூண்டிய கணவர் கைது

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவர் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு குறிஞ்சிப்பாடி வட்டம் கல்குணத்தைச் சேர்ந்த சூர்யா  என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது 20 சவரன் நகையும் இரண்டரை லட்சம் பணமும், மோட்டார் சைக்கிள் ஆகியவை சீர்வரிசையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இவர்களுக்கு ஆடிமாத சீராக 4 சவரன் தங்கச் சங்கிலியும் வழங்கப்பட்டுள்ளது. 

    வினோத்குமாரின் சகோதரி விந்தியா  பண்ருட்டியில் வீடு கட்டுவதற்காக சூர்யாவின் 5 சவரன் நகையை அடமானம் வைத்து உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்று முதல் மாமனார், மாமியார், நாத்தனார், ஆகியோர் அவருக்கு குழந்தை இல்லாததை குறையாக கூறி கொடுமை செய்துள்ளனர். அத்துடன்  குழந்தை இல்லாததற்காக  புள்ளப்பூச்சியினை உயிருடன் வாழைப்பழத்தில் வைத்து சூர்யாவை அப்படியே சாப்பிட வைத்துள்ளனர். 

    இதனால் சூர்யா கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு  சென்றுவிட்டார். அங்கு அவர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.  அதன்பேரில் போலீசார் இரு வீட்டார்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து மீண்டும் சூர்யாவை வினோத்குமாருடன்  அனுப்பி வைத்தனராம். அப்போது அவர்கள் கூடுதலாக 5 சவரன் நகையை கேட்டு உள்ளனர் அதில் நான்கு சவரன் வழங்கியுள்ள நிலையில் ஒரு சவரன் குறைவதால் அவரை மீண்டும் கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த சூர்யா கடந்த 2018 ஆம் ஆண்டு 14 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் கோட்டாட்சியர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது இந்த வழக்கின் விசாரணையை  கடலூர் அனைத்து மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது விசாரணை முடிந்து நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். 

    இதையும் படியுங்கள் ; செங்கல்பட்டில் முகவரி கேட்பது போல் நடித்து 2 லட்சத்தை அடித்துச் சென்ற 2 பலே கில்லாடிகள்.

    அதில் சூரியாவை தற்கொலைக்கு தூண்டியதாக வினோத்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் மாமனார் பழனி, மாமியார் ராஜேஸ்வரி ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும். நாத்தனார் விந்தியாவிற்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதாகவும். அதுமட்டுமின்றி அவர்களுக்கு தலா 10,000 அவதாரம் விதிக்கப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் செல்வ பிரியா தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad