Header Ads

  • சற்று முன்

    ”உறவினர்களை நம்பாதீங்க..பாதுகாப்பான இடம் கல்லறையும் கருவறையும் தான்” - பாலியல் தொல்லையால் 16 வயது சிறுமி தற்கொலை...

     

     

    Representative Image

    சென்னையில் ‘பள்ளியில் பாதுகாப்பு இல்லை..’ ’பதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும் தான்’ என கடிதம் எடுதி வைத்து விட்டு பாலியல் தொல்லை காரணமாக  16  வயது சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாங்காடு சக்தி நகரைச்  சேர்ந்த 16 வயது சிறுமி , பூவிருந்தவல்லி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.  நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.  இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மாங்காடு காவல் துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்தனர்.  

    representative image



    மேலும் தற்கொலைக்கு முன் சிறுமி எழுதிய கடிதத்தைக் கைப்பற்றி  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தக் கடிதத்தில், “ பாலியல்  தொந்தரவுகளை நிறுத்துங்கள் (Stop Sexual Harassment).. இதற்கு  மேல் முடியாது.. மனசு ரொம்ப வலிக்குது.. பாலியல் தொல்லையால் முடியவில்லை.. எனக்கு ஆறுதல் சொல்ல கூட யாருமே இல்ல.. என்னால நிம்மதியா தூங்க முடியல.. அந்த கனவு வந்து தொல்லை பண்ணுது.. படிக்க முடியல.. பாதுகாப்பே இல்ல இந்த சமூகத்துல..

    என்னோட கனவு எல்லாம் போயிடுச்சு.. எவ்வளவு வலி.. எல்லா பெற்றோரும் அவர்களுடைய மகன்களுக்கு , பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று கற்றுத்தர வேண்டும்.. எனக்கு நியாயம் கிடைக்கும் என நினைக்கிறேன்.  உறவினர்களையும், ஆசிரியர்களையும் நம்பாதீர்கள்.. எல்லோரும் காயப்படுத்துபவர்களே..  அம்மா போய்ட்டு வரேன்.., இன்னொரு உலகத்துக்கு...

    தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் கடிதம்

    பாதுகாப்பான இடம் கல்லறையும், தாயின் கருவறையும் தான்..  பள்ளிகூடத்திலும் , உறவினர்களிடமும்  பாதுகாப்பு  இல்லை.. எனக்கு நியாயம் வேண்டும்.(Justice For Me ). என்று  உருக்கமாக அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறார்..  பள்ளியில் ஏற்பட்ட  பாலியல் சீண்டல் காரணமாக ஏற்கெனவே கோவை  மற்றும் கரூரில் 2  மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சூழலில்., தற்போது மேல்உம் ஒரு சிறுமி பாலியல் தொல்லையால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 





    No comments

    Post Top Ad

    Post Bottom Ad