Header Ads

  • சற்று முன்

    ’’பிரபல கால்பந்து வீரர் திடீர் மரணம்’’..சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்..

    கால்பந்து வீரர் சோபியேன் லோவ்கர் மரணம்

    அல்ஜீரியாவை சேர்ந்த கால்பந்து வீரர் ஒருவர்  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வடக்கு நாடான அல்ஜீரியாவை சேர்ந்த   சோபியேன் லோவ்கர் வயது ( 30) இவர் எம்.சி.எஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் நேற்று ஓரான் கால்பந்து மைதானத்தில் அல்ஜீரியன் லீக் 2 கால்பந்து தொடரின் இரண்டாவது பிரிவு ஆட்டம் நடைபேற்றது.

    இந்த போட்டியின் முதல் பாதியில் அல்ஜீரியான் அணியை சேர்ந்த சோபியேன் லோவ்கர் பந்தை துரத்திக்கொண்டு ஓடி கொண்டிருந்தார் அப்பொழுது எதிர்பாராத விதமாக அவரது அணியை சேர்ந்த கோல் கீபர் மீது மோதினார். இதில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் அணிக்காக விளையாட தொடங்கினார். 

    இதையும் படிக்க ; கை விரித்த அரசு - பாலத்தை கட்டி சாதித்து காட்டிய ஊர் பொதுமக்கள்..

    அணிக்கு திரும்பிய 10 நிமிடத்திலேயே மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார் .உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அனால் அவர் செல்லும் வழியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இந்த துக்க செய்தியை கேட்ட இரு அணிகளும் போட்டியை முடித்துக் கொண்டு. ஆட்டத்தை ரத்து செய்ததாக அறிவிக்கப்படது. இந்த உயிரிழப்பு சம்பவம் கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த அதிர்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad