Header Ads

  • சற்று முன்

    இனி டாஸ்மாக் இந்த நேரத்தில் தான் திறக்கப்படும்...

     

    டாஸ்மாக்

    வழக்கமாக டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணிவரை திறக்கப்படும். ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு  அதிகம் இருந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அப்போது டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டன. பின்னர் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து , தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 

    இருந்தபோதிலும் டாஸ்மாக், மக்கள் அதிகம் கூடும் என்பதால் நேரத்தை மாற்றியமைத்து காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தது. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் டாஸ்மாக், பார்கள்  இயங்கும் நேரம் மீண்டும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, பழையபடி மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அறிவித்திருக்கிறார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad