Header Ads

  • சற்று முன்

    இறந்து விட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட முதியவர் - உயிரோடு வந்ததால் தெறித்து ஓடிய கிராம மக்கள்.

    இறந்து விட்டதாக கூறி அடக்கம் செய்யப்பட்ட முதியவர்.

    கர்நாடகாவில் இறந்து விட்டதாக கூறி அடக்கம்  செய்யப்பட்ட நபர் 3 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் உயிரோடு வந்து ஊர் மக்களை பீதியடையச் செய்திருக்கிறார்.

    துமகூரு மாவட்டம், மலூரைச் சேர்ந்த நாகராஜப்பா என்ற 55 வயது முதியவர் மதுவுக்கு அடிமையாக இருந்திருக்கிறார். மதுபோதையில் வீதிகளில் சுற்றி வந்த நாகராஜப்பா திடீரென்று காணாமல் போனதாக கூறப்படுகிறது. கடைசியாக 3 மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் செவிலியராக பணியாற்றி வரும் அவரது இளைய மகள், நேத்ரா வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

    அதன்பின் எங்கும் எங்கும் தேடியும் கிடைக்காத நிலையில், செப்டம்பர் 18 ஆம் தேதி சென்ட் ஜான்ஸ் மருத்துவமனை அருகே அவரை போன்ற உருவம் கொண்ட ஒருவரது சடலம் கிடைத்திருக்கிறது.  அது நாகராஜப்பா-தான் என அவரது மகள்கள் உறுதி செய்திருக்கின்றனர்.  பின்னர், உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு உறவினர்கள் முன்னிலையில் முறையாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    நாகராஜப்பாவுக்கு இறப்புச் சான்றிதழ் கூட பெறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த நவ. 30 தேதி நாகராஜப்பா திடீரென பேருந்திலிருந்து இறங்கி ஊருக்குள் சென்று இருக்கிறார்.  அவரை மீண்டும் உயிரோடு பார்த்த கிராமமக்கள் பீதியடைந்து தெறித்து ஓடியிருக்கின்றனர் .

    இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது,  போதையில் வழிதவறி எங்கோ சென்று விட்டதாகவும் இது நாள் வரை கூலி வேலை செய்து வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.  இறந்துபோனதாக எண்ணிய தனது அப்பா மீண்டும் உயிருடன் வந்திருப்பது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக  அவரது மகள்கள் தெரிவித்திருக்கிறார்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad