Header Ads

  • சற்று முன்

    ஏர் இந்தியா ஊழியர்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


    ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18 ஆயிரம் கோடிக்கு டாடா நிறுவனம் வாங்கியுள்ளது. இதனால் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களின் நிலை கேள்விக்குறியானது. 

    ஏற்கெனவே ஏர் இந்தியாவில் பணியாற்றிய ஊழியர்களை தக்கவைத்துக்கொள்ளுமா அல்லது, அவர்களை வெளியேற்றிவிடுமா என்ற அச்சம் எழுந்தது. இதனைத்தொடர்ந்து  ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்காமல் ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்க தடை விதிக்கக்கோரி, ஏர் கார்பரேஷன் ஊழியர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. 

    இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , ஏர் இந்தியா நிறுவன குடியிருப்புகளில் வசிக்கும் ஊழியர்களை வெளியேற்றவும், மருத்துவ சேவைகளை நிறுத்தவும் தடை விதித்து உத்தரவிட்டது.  மேலும், மத்திய அரசு, ஏர் இந்தியா மற்றும் டாடா நிறுவனம் ஆகியவை ஜனவரி 7ம் தேதிக்குள் பதிலளிக்கவும் நீதிபதி பார்த்திபன் உத்தரவிட்டார். 

     



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad