Header Ads

  • சற்று முன்

    மது போதையில் லாரி ஓட்டிய ஓட்டுநரை வெளுத்து வாங்கிய உரிமையாளர்..

     

    மது போதையில் லாரி ஓட்டிய ஓட்டுநரை வெளுத்து வாங்கிய உரிமையாளர்..

    30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சரக்கை ஏற்றிச் சென்ற மினி லாரி ஒன்று உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று சேராததால் தவித்துப் போனார் லாரி உரிமையாளர். நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக நிறுத்தப்பட்டிருந்த தனது லாரியை கண்டுபிடித்து அதனருகில் போதையில் இருந்த ஓட்டுநரை தனது தவறை உணர வேண்டும் என்பதற்காக தென்னை மரத்தின் காய்ந்த மட்டையால் அடித்து துவம்சம் செய்தார்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காசு கேட்டு கொடுக்கலையா? 30 லட்சம் ரூபாய் முதல் உன்னை நம்பி போட்டிருக்கேன்? இனிமே பகலில் தண்ணி போடுவியா என்று கேட்டு விளாசிய ஒவ்வொரு அடியும் ஓட்டுனருக்கு எச்சரிக்கை பாடம் போல் இருந்தது. ஒரு கட்டத்தில் வலி தாங்காமல் இனி குடிக்க மாட்டேன் என்று அந்த ஓட்டுநர் கதற ஆரம்பித்தார் இருந்தாலும் ஆத்திரம் அடங்காமல் லாரி உரிமையாளர் அடித்துள்ளார்.

    ஏற்கனவே இந்த ஓட்டுநர் திருச்சியிலும் இதேபோல் மது அருந்திவிட்டு லாரியை நடுவழியில் போட்டு விட்டதாகவும் மறுபடியும் அதேபோல் செய்ததால் ஆத்திரம் தாங்காமல் தான் தாக்கியதாக அந்த லாரியின் உரிமையாளர் தெரிவித்தார். லாரி ஓட்டுநரை தக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த தாக்குதலுக்கு லாரி ஓட்டுனர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். லாரி உரிமையாளர்களுக்கு தவறு செய்யும் ஓட்டுநர்களை கண்டிக்கும் உரிமை உண்டு ஆனால் இப்படி கண்மூடித்தனமாக அடிப்பதற்கு உரிமை இல்லை என்றும் இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் கண்டித்துள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad