Header Ads

  • சற்று முன்

    முதல்நாள் செய்த பரோட்டாவை , நீரில் நனைத்து மறுநாள் சூடேற்றி விற்பனை.. - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி...

     


     

    பரோட்டா என்றால் பலருக்கும் பிடித்தமான உணவு..  சாப்பாடு என்றால் உணவு... பரோட்டா என்றால் உணர்வு(Emotion) என்கிற அளவுக்கு அதன் மீது தீராத காதல் கொண்டவர்கள் பலர் இருக்கிறார். அப்படிப்பட்ட பரோட்டா பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்திதான் இது..


    தேனி மாவட்டம் பெரியகுளம் பேருந்து நிலையம் அருகே சின்னத்தம்பி என்பவருக்குச் சொந்தமான பாக்யா ஹோட்டல் இயங்கி வருகிறது.  இந்த ஹோட்டலில் முதல் நாள் விற்பனையாகாமல் மீதமாகும் பரோட்டாக்களை தண்ணீரில் ஊரவைத்து, மறுநாள் அதனை கல்லில் போட்டு சூடேற்றி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ  தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


     

    மைதாவினால் செய்யப்படும் பரோட்டாவே உடலுக்கு தீங்கு என எச்சரிக்கைகள் எழுந்து வரும் சூழலில், பழைய பரோட்டாவை சூடு செய்து விற்பனை செய்யப்படும் வீடியோ பரோட்டா பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும்  வீடியோ எடுத்தவர்கள், இதுகுறித்து அந்த கடைக்காரரிடம் கேட்டபோது  மீதமான பரோட்டாக்களை தூக்கி போட மனம் வரவில்லை என்றும் பரோட்டாவால் ஒரு பிரச்னையும் வராது என்றும் தெரிவித்திருக்கிறார்.

    இதுபோன்ற பழைய உணவுகளை சாப்பிடுவதால் உடல்நலக்குறை ஏற்படும் என்றும், ஹோட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து,  உணவக உரிமையாருக்கு ரூ.2000 அபராதம் விதித்து உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பழைய உணவை விற்பனை செய்தது  குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad