Header Ads

  • சற்று முன்

    விஜய் திவாஸ் போர் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி.!!

     

    விஜய் திவாஸ் போர் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

    1971-ல் இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் வெற்றிபெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சென்னை போர் நினைவுச் சின்னம் அருகே ஸ்வர்னிம் விஜய் திவாஸ் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் ராணுவ அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.


    விஜய் திவாஸ் போர் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி


    1971-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரில் இந்தியா மாபெரும் வெற்றி அடைந்தது. 16/12/1971-ல் மாலை 4.21மணிக்கு இதே நாளில்தான் நிபந்தனையற்ற போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதனை அடுத்து இந்த பேரில் பாகிஸ்தான் வீரர்கள் 93 ஆயிரம் பேர் இந்தியாவிடம் சரணடைந்தனர். அதனைத்தொடர்ந்து டிசம்பர் 16-ஆம் தேதி விஜய் திவாஸ் என்று இந்தியா கொண்டாடி வருகிறது. 

     

    விஜய் திவாஸ் போர் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

    இந்நிலையில் சென்னை தீவுத்திடல் அருகே உள்ள காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னம் 19-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிட திறந்து வைக்கப்படும் என்று தென் பராந்திய ஜெனரல் லெப்டினன்ட் அருண் நேற்று  தெரிவித்துள்ளார்.


    விஜய் திவாஸ் போர் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி


    சென்னை போர் நினைவு சின்னத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு வந்து வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திவிட்டு. முதல்வர் முக ஸ்டாலின் அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டார். போரின் முடிவில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் பலகை வைக்கப்பட்டுள்ளது.  

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad