Header Ads

  • சற்று முன்

    திருவொற்றியூரில் கட்டிட விபத்து -கட்டிடத்தின் தன்மையை ஆய்வு செய்வது அரசின் பொறுப்பு...டிவிட் செய்த டிடிவி. தினகரன்.

    திருவொற்றியூரில் கட்டிட விபத்து

    சென்னையை அடுத்த திருவொற்றியூரில் இருந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த குடியிருப்பில் நேற்று இரவு திடீரென பெரிய சத்தம் கேட்டு கட்டிடத்தில் விரிசல் விழுந்துள்ளது. இதனையடுத்து சுதாகரித்துக் கொண்ட பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேறிய நிலையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்துள்ளது. இதில் பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்க பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர். எனினும் கட்டிடம் இடிந்து விழுந்ததில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்று தேடுதல் பணியும் நடைபெற்று வருகிறது.

    டிடிவி. தினகர்ன் அமமுக பொது செயலாளர்.

    இதையும் படிக்க ; பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் மரணம்..’’ அவரது பெயரை போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்தார்.’’- ஸ்டாலின் புகழஞ்சலி.!

    இது குறித்து அமமுகபொதுச் செயலாளர்  டி.டி.வி.  தினகரன் சமுக வலைதளமான டிவிட்டரில்  டுவிட் ஒன்றை செய்துள்ளார் . அதில் கூறியிருப்பதாவது  சென்னை திருவொற்றியூரில்  இடிந்து விழுந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு உடனடியாக மாற்று இடங்களை தமிழக அரசு வழங்குவதுடன் அதே வளாகத்தில் உள்ள எஞ்சிய அடுக்குமாடி குடியிருப்புகளில் நிலை தன்மையையும் பரிசோதனை செய்ய வேண்டும். இது மட்டுமின்றி 20 ஆண்டுகளை தாண்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து அவை மக்கள் வசிக்க ஏற்றவை என உறுதி செய்துகொள்ள வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad