Header Ads

  • சற்று முன்

    தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்..

    தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு



    வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகியவற்றின் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதுவரை தண்ணீரையே பார்க்காத ஆறு ஏரி குளங்கள் நிரம்பி வழிகின்றன,.முருகன் கோவில் தைப்பூச மண்டபம் ஆகியவற்றை நீர்மூழ்கி இருக்கிறது பல பகுதிகளில் தரை பாலங்கள் மூழ்கிவிட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களின் வீடுகளுக்கு தஞ்சமடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.


    நெல்லை ,தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு



    தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார்.

    நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு, மற்றும் கடனா அணை பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் சூழல் இருக்கிறது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad