Header Ads

  • சற்று முன்

    மர்மமான முறையில் மாணவி இறப்பு.!! பெற்றோர்கள் உடலை வாங்க மறுப்பு.!!

    மர்மமான முறையில் மாணவி இறப்பு

    திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில் 9 வயது சிறுமி பள்ளி மைதானத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாச்சலூர்  கிராமத்தில் சத்யராஜ் என்பவர் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் நேற்று வழக்கம்போல் பாச்சலூரில்  உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு சென்றுள்ளனர்.

    மர்மமான முறையில் மாணவி இறப்பு

    இந்நிலையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி காலை 11 மணி அளவில் இடைவேளையில் வெளியே வந்த மாணவி வகுப்பிற்கு மீண்டும் வராமல் பள்ளி மைதானத்தில் பாதி உடல் கருகிய நிலையில் கிடந்துள்ளார்.  இதனைப் பார்த்த ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவியை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு பரிசோதித்த மருத்துவர் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.


    மர்மமான முறையில் மாணவி இறப்பு

    இதனையடுத்து காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து பள்ளியில் பணியாற்றிய 3 ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் சிறுமியின் சடலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குழந்தையின்  மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  மேலும் அவர்களை சமாதானம் செய்ய வந்த பழனி, திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவ மனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad