Header Ads

  • சற்று முன்

    வாகனத்தை முந்திச் செல்ல வழி விடாததால், ஓட்டுநரை அடித்த இளைஞன் கைது.!!

     


    திருவள்ளூரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் அரசு பேருந்து ஒன்று பயணிகளை இறக்கி விடுவதற்காக திருப்பாச்சூர் பகுதியில் நின்று கொண்டிருந்தது. அந்த பேருந்துக்கு பின்னால் வந்த டாடா ஏசி ஒன்று பேருந்தின் முன் புறத்தில் வாகனத்தை நிறுத்தி தனது வாகனத்திற்கு வழிவிடவில்லை எனக்கூறி பேருந்து ஓட்டுனரான கார்த்திகேயனை தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற கார்த்திகேயன் ஒரு கட்டத்தில் அவரும் திருப்பி தாக்கியதால் ஆத்திரமடைந்த இளைஞன் அவரது கையைப் பிடித்து சட்டையை கிழித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளான்.


     

    இதனையடுத்து பேருந்தில் பயணித்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த டாட்டா ஏசி ஓட்டுநரை மடக்கிப் பிடித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த போலீசார் அடாவடி இளைஞனை கைது செய்த்துடன் மட்டுமின்றி டாட்டா ஏசி வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


     

    விசாரணையில் அவன் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சாரதி என்பது தெரியவந்தது. காயமடைந்த அரசு ஓட்டுநரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பேருந்தில் பயணித்த 40-க்கும் மேற்பட்ட பயணிகளை மாற்று பேருந்து வரவைத்து அனுப்பி வைத்தனர். முந்தி செல்ல வேண்டும் என்ற ஆத்திரத்தால் வம்பு இழுத்து கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அந்த 20 வயது இளைஞன் என்று போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad