Header Ads

  • சற்று முன்

    ”கலைஞரின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் சண்முகநாதன்” - வைரமுத்து, கி.வீரமணி அஞ்சலி.!!

    கவிஞர் வைரமுத்து

    கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார் அவரது உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். இந்நிலையில்  கவிஞர் வைரமுத்து  அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். 

    அப்பொழுது அவர் என்ன சொல்வது, கலைஞரின் நிழல் மறைந்து விட்டது என்று சொல்வதா, திராவிட இயக்கத்தின் நூலகம் சரிந்து விட்டது என்று செல்வதா,  கருணாநிதியின் நினைவுகளை சுமந்து வந்த பெட்டகம் முடிந்துவிட்டது என்று சொல்வதா என்று கூறினார்.

    அறிவு, திறமை,  விசுவாசம் இந்த மூன்றும் உடையவர் மறைந்த அண்ணன் சண்முகநாதன். அவரை நினைக்கும் பொழுது கலைஞரும் கலந்து நினைக்கிற போது அவரும் மாறி மாறி நெஞ்சில் வருவது தவிர்க்கமுடியாதது.

    கலைஞர் ஒரு ஆலமரம் அந்த ஆலமரத்தின் விழுதுகளில் பலர் ஊஞ்சல் கட்டி ஆடி கொண்டிருந்த பொழுது அந்த ஆலமரத்துக்கு குடைபிடித்தவர் சண்முகநாதன்.

    கலைஞரின் அலுவலகத்தில் சண்முகநாதனை கண்டு வியந்திருக்கிறேன். சுறுசுறுப்போடு கூடிய பரபரப்பு, பரபரப்போடு கூடிய சுறுசுறுப்பு அதை கண்டு வியந்துள்ளேன்.

    கலைஞரிடம் உதவியாளராக இருப்பது அத்தனை எளிதல்ல, சூரியனில் உருகிவிடாதா உலோகம் அரிது. ஆனால் சூரியனிடம் இருந்தும் உருகி விடாத உலோகம் சண்முகநாதன்

    கலைஞர் என்றால் உயிராக இருந்த சண்முகநாதன் கலைஞரின் மறைவுக்கு பிறகு இதனை நாள் உயிருடன் இருந்ததே எனக்கு ஆச்சரியமாக உள்ளது. கலைஞரை குறித்து எழுதும் போது ஒரு அத்தியாயமாக எழுதப்பட வேண்டியவர் சண்முகநாதன் என அவர் தெறிவித்தார்.


    திராவிட கழக தலைவர் கி.வீரமணி


    இதனை அடுத்து அஞ்சலி செலுத்திய பின் பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கூறுகையில் அரை நூற்றாண்டு காலம் கருணாநிதியின் மிகப்பெரிய அங்கமாக வாழ்ந்தவர்.ஐம்பதாண்டு காலம் கருணாநிதியின் வேகத்துக்கு ஈடுகொடுத்தது என்பது சாதாரண காரியம் இல்லை. அவரின் இழப்பு மிகபெரிய இழப்பு. கலைஞரின் எழுத்துக்கள், வரலாற்றைப் படிக்கும் போதெல்லாம் சண்முகநாதன் வாழ்ந்து கொண்டே இருக்கிறார். அவர் மறையவில்லை அவரது எழுத்துக்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் என அவர் தெறிவித்தார்.

    காவிரி விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன்

    இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறுகையில் காவிரி மண்ணின் மைந்தர். கலைஞரின் நெருங்கிய நண்பர். காவிரி மற்றும் விவசாயிகள் பிரச்சினை குறித்து கலைஞரை சந்திக்க அனைத்து ஏற்பாடுகளையும் சண்முகநாதன் செய்து கொடுப்பார் எனவும், வரலாற்று சிறப்பு மிக்க காவிரி உரிமையை தமிழகம் பெற்றதற்கு அடிப்படையாக விளங்கியவர் சண்முகநாதன். இவர் காவிரி டெல்டா குறித்து முழுமையாக அறிந்தவர். விவசாயிகள் பிரச்சினைகள் குறித்தும் கலைஞரிடம் தெரிவித்து  காவிரி உரிமையை சட்ட ரீதியாக பெற முடிந்தது என்றும் அவரது இழப்பு காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மிக பெரிய இழப்பு என கூறினார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad