Header Ads

  • சற்று முன்

    தனக்கு பிறகு யார்.? மகளை கொன்று தாய் எடுத்த விபரித முடிவு.

    பொள்ளாச்சி

    பொள்ளாச்சியில் தாய் மகள் விஷம் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி. நள்ளிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தர் ரத்தினசாபாபதி. இவரது மனைவி கலாமணி வயது ( 65 ) இவர்களுக்கு பிரியா என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உள்ளார். ரத்தினசாபாபதி கடந்த ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் தனியாக வசித்துவந்துள்ளார். இவர்களுக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் உதவி வந்ததாக கூறப்படுகிறது. 

    இதற்கிடையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாள் அக்கம் பக்கத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தனக்கு பிறகு யார் என் மகளை பார்த்துக் கொள்வார் என்று அக்கம் பக்கத்திலும் உறவினர்களிடமும் சொல்லி புலம்பியதாக கூறப்படுகிரது.

    இந்நிலையில் நேற்று இரவு தாய் மகள் என இருவரும் விஷம் அருந்தி கிடந்துள்ளன இதனை அங்கு சென்ற உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தியதில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட பெண்ணை தனக்கு பிறகு யார் பார்த்துக் கொள்வார் என விரக்தியில் 2 பேரும்  விஷம் அருந்தி இறந்தது தெறியவந்தது. தாய் மகள் என இருவரும்  விஷம் அருந்தி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad