Header Ads

  • சற்று முன்

    கை விரித்த அரசு - பாலத்தை கட்டி சாதித்து காட்டிய ஊர் பொதுமக்கள்..

    பாலத்தை கட்டிய கெங்கவல்லி ஊர் மக்கள்


    கெங்கவல்லியில் ரூபாய் 3 லட்சம் செலவில் ஆற்றின் குறுக்கே ஊர் பொதுமக்கள் பாலம் அமைத்தனர்.

    கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 9 வது வார்டு பகுதியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பேய்த கன மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள சுவேதா நதிகரையில் கழுத்தளவு தண்ணீர் சென்றதாள். கரையை கடப்பதற்க்கு ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் சிறமத்துகு உள்ளானர்கள்.

    இதனை அடுத்து அப்பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள்  கெங்கவல்லி பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுபணித்துறை, நெடுச்சாலைதுறை அதிகாரிகளை சந்தித்து ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர். ஆனால்  இதுவரை எந்த ஒரு  நடவடிக்கையும் எடுக்காததாள் விரக்தி அடைந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து 50 அடி நீளத்திற்க்கு தரைபாலம் அமைக்க திட்டமிட்டனர்.இதற்காக  3 லட்சம் ரூபாய் அளவில்  செலவு செய்து  பாலத்தை அமைத்தனர். 

    இதையும் படிக்க; ராமநாதபுரத்தில் மின்சாரம் தக்கி விவசாயி பலி..ஊர் பொது மக்கள் சாலை மறியல்..

    இதுகுறித்து கூறிய ஊர் பொதுமக்கள் பாலம் அமைப்பதற்கு முன்பு  குறிப்பாக மருத்துவமணை, பள்ளிக்கு செல்லவும், மளிகை பொருட்டகள் வாங்கவும் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சென்று சுற்றி வரும் சூழ்நிலை ஏற்பட்டதாகவும்  பாலம் அமைப்பதற்கு மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் தாங்கலே பாலத்தை அமைத்தாதகவும் கூறினர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad