Header Ads

  • சற்று முன்

    விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டனம் குறைப்பு..

     

    விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு


    தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, வங்கதேசம், மொரிஷியஸ் ,போட்ஸ்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் ,இஸ்ரேல் உள்ளிட்ட ஓமைக்ரான் பரவல் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து  தமிழகம் வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது


    விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு


    அவ்வாறு
      பரிசோதனை செய்யப்பட்டுஅதன் முடிவு வரும் வரை விமான நிலைய வளாகத்திலேயே  பயணிகள் தங்க வைக்கப் படுகிறார்கள். விமான நிலையத்தில் செய்யப்படும் ஆர்டிபிசிஆர்  பரிசோதனைக்கு ரூ. 700 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் முடிவு வருவதற்கு  6 மணி நேரம் வரை பயணிகள் காத்திருக்க வேண்டும்

    இதனால் 3,400 ரூபாய் கட்டணத்தில் 45 நிமிடங்களுக்குள் முடிவு வரக்கூடிய ரேபிட் பிசிஆர் பரிசோதனை  செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.   இதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.


    விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு


     இந்த நிலையில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பரிசோதனைக்கான கட்டணத்தை விமான நிலைய ஆணையகம் குறைத்துள்ளது. அதன்படி  ரேபிட்  பிசிஆர் பரிசோதனையில் ரூபாய் 500 குறைக்கப்பட்டு ரூ.2 , 900 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணத்தில் 100 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ. 600 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண சலுகை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad