Header Ads

  • சற்று முன்

    இனி ஆன்லைன் மூலம் காணிக்கை செலுத்தும் வசதி- ஐயப்பன் கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!!

     


    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் ஆன்லைன் மூலம் காணிக்கை செலுத்தும் வசதியை திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. தனலட்சுமி வங்கியுடன் இணைந்து சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இனிமேல் இ-சேவை மூலமாக காணிக்கை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.



    இதன்படி  இனையதளம் வழியாகவும் அல்லது மற்ற கியூ.ஆர்.கோட் ஸ்கேனிங் முறைப்படியும் பக்தர்களின் காணிக்கை செலுத்தலாம். அதன்படி காணிக்கை செலுத்த ஏதுவாக சன்னிதானம், நிலக்கல் ஆகிய இடங்களில் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்கு 9495999919 என்ற எண் வழியாக காணிக்கை செலுத்தலாம்.

    இதேபோல் சபரிமலைக்கு செல்லும் பாதைகளிலும் பல்வேறு இடங்களில் காணிக்கை செலுத்த கியூ.ஆர்.கோட் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் சபரிமலை தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad