Header Ads

  • சற்று முன்

    ’’மறைந்தது கலைஞரின் நிழல்’’..கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மறைவு.!!

    கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் மறைவு


    முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நிழல் என்று புகழப்படும், அவரிடம்  50 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதன் இன்று காலமானார்.

    1942 ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவர் சாமிநாதன்.  ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு 3 தங்கைகள்,  3 தம்பிகள் உள்ளனர்.  மூத்த மகனாக  பிறந்த இவர் பொருளாதார சிக்கல்களை சமாளித்து தனது படிப்பை முடித்திருக்கிறார். சிறு வயதிலிருந்தே கூலி வேலைக்குச் செல்வது,  குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வது என பொறுப்புகளைச் சுமந்த சாமிநாதன், படித்து முடித்து ரூ.50 சம்பளத்திற்கு கூட்டுரவு வங்கியில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.  பின்னர் சர்வீஸ் கமிஷன் தேர்வெழுதி அதில் தேர்ச்சி பெற்ற அவருக்கு, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் வேலை கிடைத்துள்ளது.  

    கலைஞரின் நிழல் மறைவு.

    அங்கு  கட்சிக் கூட்டங்களில் தலைவர்கள் பேசுவது உள்ளிட்டவற்றை சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து, அதனை தட்டச்சு செய்யும் பணி. அப்படி ஒரு நாள் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக கலைஞரின் கூட்டத்தை  போலீஸ் ரிப்போர்ட் செய்வதற்காக சென்றுள்ளார். கலைஞரின் பேச்சை குறிப்பெடுத்து தட்டச்சு செய்திருக்கிறார்.. இவரது குறிப்பின் மூலம் கலைஞர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பின்னர் கலைஞரும் அந்தப் பிரதியை படித்து பார்த்திருக்கிறார். தான் பேசியதை அப்படியே  எழுதியிருகிறாரே என்று  ஆச்சரியப்படுபோன கலைஞர், திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சாமிநாதனை ஞாபகம் வைத்து அழைத்திருக்கிறார். 


    கலைஞரின் நிழல் சண்முகநாதன் மறைவு
     

    தனக்கு பி.ஏ வாக இருக்கும்படி முதலில் கலைஞர் கேட்டபோது, முதலில் சாமிநாதன்  சம்பளம் குறைவாக இருந்த காரணத்தால் மறுத்துள்ளார். பின்னர் 16.02.1969 ஆம் ஆண்டு கலைஞரிடம் பி.ஏவாக சேர்ந்துகொண்டார். அப்போது தொடங்கி கலைஞர் மறையும் வரை சுமார் 50 ஆண்டுகள்  அவருடனேயே பயணித்தவர். கருணாநிதியின் நிழல் என்று குறிப்பிடும் அளவுக்கு அவருடன் நெருக்கமாக இருந்தவர்  சண்முகநாதன்.  உச்சி முதல் பாதம் வரை கலைஞரை பற்றி அனைத்தும்  அறிந்தவர். கலைஞர் கருணாநிதிக்கும் இவருக்குமான இடையேயான உறவு அவ்வளவு நெருக்கமானதாக  இருந்தது. பொதுக்கூட்ட மேடைகள், அவரது இல்லம்  என அனைத்து இடங்களிலும்  செல்லக்கூடியவரும், கலைஞரின் கண் அசைவிற்கும் அர்த்தம் புரிந்து கொள்பவரும் சாமிநாதன் ஒருவரே.. 


    இதையும் படிக்கவும்; முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை தேடும் பணி தீவிரம்’’. மேலும் 2 தனிப்படை அமைப்பு


    கருணாநிதியின் மறைவுக்கு பிறகு அவ்வப்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த  சண்முகநாதன், 2 நாட்களுக்கு முன்னர்  சென்னை காவேரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.  அவரது மறைவுக்கு  தலைவர்கள் பலரும்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad