Header Ads

  • சற்று முன்

    விடைபெறுகிறார் முப்படை தலைமை தளபதியின் பிபின் ராவத் - பிரார் மயானத்தில் நல்லடக்கம்..

     

    பிபின் ராவத் - பிரார் மயானத்தில் நல்லடக்கம்..

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் உடல்களை டெல்லியில் உள்ள அவரது வீட்டில்  வைக்கப்பட்டிருந்தது. உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் காலை முதல் அஞ்சலி செலுத்தி வந்தனர்.


    பிபின் ராவத் - பிரார் மயானத்தில் நல்லடக்கம்..


    நிலையில் தற்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் இறுதி ஊர்வலம் நடைபெற்று வருகிறது. அவரது உடல் டெல்லியில் உள்ள பிரார் மயானத்தில் அடக்கம் செய்வதற்கு இருவரின் உடல்களும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிபின் ராவத் இன் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.


    பிபின் ராவத் - பிரார் மயானத்தில் நல்லடக்கம்..


    பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ஆகியோரின் இறுதி ஊர்வலத்தைக் காண டெல்லியில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். இறுதி ஊர்வலம் சென்ற ராணுவ வாகனத்தை சுற்றி ஏராளமான பொதுமக்கள் தேசியக்கொடியுடன் அஞ்சலி செலுத்தினர். பிபின் ராவத்தின் உடலை எடுத்துச்செல்லப்படும் ராணுவ வாகனம் பிற்பகல் 3:30 மணிக்கு விரார் சதுக்கம் சென்றடைய உள்ளது. சதுக்கத்தில் 17 குண்டுகள் முழங்க இராணுவ வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர் முப்படையை சேர்ந்த 99 அதிகாரிகளும் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad